இணையதள மேம்பாடு மற்றும் வடிவமைப்பு நடந்து கொண்டிருக்கின்றது

Wednesday, 8 January 2020

ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறப்பு? தீர்ப்பு ஒத்திவைப்பு


சென்னை: துாத்துக்குடி, 'ஸ்டெர்லைட்' ஆலையை திறக்க கோரி, வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தது.


துாத்துக்குடியில் இயங்கி வந்த, ஸ்டெர்லைட் ஆலையை மூட, தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, ஆலைக்கு, 'சீல்' வைக்கப்பட்டது. அரசின் உத்தரவை எதிர்த்து, ஆலையை திறக்கக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், ஸ்டெர்லைட் ஆலையை நிர்வகிக்கும், வேதாந்தா நிறுவனம் மனு தாக்கல் செய்தது.

                              

வழக்கு விசாரணையின் 39வது நாளான இன்று(ஜன.,8), அரசு தரப்பு மற்றும் வேதாந்தா நிறுவனத்தின் தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அரசு தரப்பில், தமிழ்நாடு மாசு கட்டுபாடு வாரியத்தின் விதிகளை பின்பற்ற ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மறுத்ததால், ஆலை மூடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிட்டால், விதிகளுக்கு கட்டுப்பட்டு நடப்பதாகவும், கூடுதல் கட்டுபாடுகள் விதித்தாலும் அதை பின்பற்றத் தயார் எனவும் வேதாந்தா நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களும் இன்று முடிவடைந்த நிலையில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல், நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அமர்வு ஒத்திவைத்தது.